காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், திருச்சி மேலணையில் (முக்கொம்பு) இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே விரிசல் அடைந்து இருந்த திருச்சி கொள்ளிடம் பாலம் தூண் தற்போது வெள்ளத்தில் சரிந்து பாலம் சேதமடைந்துள்ளது.
இது குறித்த முந்தையச் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
-கே.பி.சுகுமார்.
வெள்ளைக்காரன் 90 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலத்தின் இன்றுவரையில் தன்பணியை செவ்வனே செய்து விடைபெற்றது. அவர்கள் தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக மிகவும் அக்கறையுடன் சுயநலத்திலும் ஒரு பொது நலன் என்ற நோக்கத்தோடு கட்டிய பாலம்.
ஆனால், இன்றோ… தற்போது இருக்கும் இந்த கொள்ளையன் கட்டிய பாலம் கட்டியவர்களின் பேர் சொல்லுமா……
தமிழகத்தில் அமைச்சராக இருக்கும் வெல்லமண்டி நடராஜன் அவர்கள்.. அமைச்சரா.. இல்லை… ஆதார் காரரா… (சாதாரண மனிதன்).. அவரின் பேட்டி தனது இயலாமையை காட்டுகிறது. அமைச்சராக இருக்கும் ஒருவர் வெள்ளைக்காரன் கட்டிய பாலத்தை பராமரித்து அவர்கள் பயன்படுத்திய நுனுக்கங்களை ஆராய்ந்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஒரு வார்த்தையை கொடுக்க
முடியாமல்… அந்த பாலம் விரைவில் இடித்து தல்லப்படும் என்று பொத்தாம்பொதுவாக சொல்லியிருப்பது வேதனைக்குறியது.