‘பண்போடும், கட்டுப்பாட்டோடும், ஒழுக்கத்தோடும் இருங்கள்’ – என சொல்பவரை “சர்வாதிகாரி” என முத்திரை குத்துகின்றனர் என்று, இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய (“Moving on…Moving forward: A year in office” ) புத்தக வெளியீட்டு விழாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி வேதனை தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர்கள் ஹெச்.டி.தேவகவுடா, மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விவசாயத்திற்கு நீடித்த ஆதரவு தேவைப்படுகிறது. அனைவர் மீதும் அக்கறை செலுத்தும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, விவசாயம் குறித்தும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், விவசாயத்தை விட்டு மக்கள் விலகிவிடுவர்.
பார்லிமென்ட் இயல்பாக இயங்காதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. உலக வங்கி, உலக பொருளாதார அமைப்பு அனைத்தும் இந்திய பொருளாதாரம் குறித்து தரும் அறிக்கைகள் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும். இவ்வாறு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
-எஸ்.சதிஸ் சர்மா.