மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் 30-ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில், சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையம் முதல், மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அமைந்துள்ள மு.கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி இன்று நடைப்பெற்றது.
இதில் மு.க.அழகிரியின் மகனும், கிளவுட் நயன் மூவீஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான தயாநிதி, மு.க.அழகிரியின் மகள் கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.
இப்பேரணியில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மு.க.அழகிரி தலைமையில் இன்று நடைப்பெற்ற இப்பேரணிக்கு, தமிழக அரசின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு இருந்தது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
படங்கள்: எஸ்.திவ்யா, ஏ.வனிதா.
தமிழக அரசு மெரினாவில் கூட்டம் கூடுவதற்கு தடை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவில் மக்களை திரட்டி அமைதி ஊர்வலம் நடத்துவதற்கு எதன் அடிப்படையில் தமிழக அரசு அனுமதி வழங்கியது….. சட்டம் சாமானியனுக்கு மட்டும்தானா?… இது எவ்வாறு உள்ளது என்றால்…