ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு!-திருச்சி தேசியக் கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்!

திருச்சி தேசியக் கல்லூரி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு தேசியக் கல்லூரியின் நிர்வாகம், Dr.ஏ.கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அனைவரையும் அழைத்து, வாழ்த்தி அனைவருக்கும் வாழ்த்துப் பட்டயம் வழங்கி இன்று சிறப்பித்தனர்.

இதில் 260-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அழைப்பு கடிதம் விடுக்கப்பட்டது. அக்கடிதத்தை ஏற்று 120-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதில் பங்கு பெற்றனர். சிலர் பட்டயங்களை ஏற்றுக் கொண்டு தங்களது பழைய அனுபவங்களையும், கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களையும் இந்த விழாவில் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு சிலர் முதுமையின் காரணமாக பயணம் செய்து இங்கு வருவதற்கு இயலவில்லை. மேலும் சிலர் வேறு பல காரணங்களாலும் வர இயலாமையை கூறி வரஇயலாமைக்கு வருத்தங்களையும், நிகழ்ச்சி நிறைவாக இருக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

கல்லூரியின் முதல்வர் முனைவர். இரா.சுந்ததரராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அனைவருக்கும் கல்லூரியின் செயலர் கா.ரகுநாதன் வாழ்த்துக்களையும், நினைவு பரிசையும் வழங்கி நன்றி தெரிவித்தார். மேலும், கல்லூரியின் தோற்றம் மற்றும் முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களின் இடைவிடாத உழைப்பினால் கல்லூரியின் தற்போதைய நிலை மற்றும் கல்லூரியை பற்றிய தன்னுடை வருங்கால கனவு ஆகியவைகளை எடுத்துரைத்தார். மேலும் தன் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி பாராட்டினார்.

வேதியியல் துறை இணைப் பேராசிரியர், முனைவர் பிரேமலதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, நிறைவாக நன்றியுரையாற்றினார்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply