இந்திய குடிமக்களின் கை விரல் ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட ரகசியங்களை பெற்று, அவர்களுக்கு ஆதார் வழங்கியுள்ளதன் மூலம், இது தனி மனித உரிமையை மீறும் செயல் எனக் கூறி, ஆதாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்; ஆனால், ஆதார் இல்லை என்பதற்காக அடிப்படை உரிமைகளை மறுக்கக்கூடாது.
சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு ஆதார் கிடைக்காது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
தனி நபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஆதார் மூலம் சமூக திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரும் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்று கொள்ள கூடியது.
தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கேட்பது சட்ட விரோதம்.
நீட், சிபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமாக்க கூடாது.
பள்ளி சேர்க்கைக்கு ஆதாரை கேட்கக்கூடாது.
கல்வி, நம்மை கைநாட்டிலிருந்து கையெழுத்து போட கற்று கொடுத்தது. ஆனால், தொழில்நுட்பம் கைநாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது.
வங்கி கணக்கு, மொபைல் போன் சேவை, சிம்கார்டு வாங்க ஆதார் தேவையில்லை.
பான் எண்ணுடனும் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அவசியம்.
ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் கட்டாயம்.
நீதிமன்ற உத்தரவு இல்லாமல், பயோமெட்ரிக் தகவல்களை எந்த நிறுவனத்திற்கும் பகிரக்கூடாது. ஆதார் எண்ணை, எந்த மொபைல் நிறுவனங்களும் கட்டாயமாக கேட்கக்கூடாது.
இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
எப்பா.. நீதி ராசா… ஏம்ப்பா…. இப்படி மக்களை ஏன் குழப்புகிறீர்கள்.. நீங்கள் நீதிக்கு அரசரா….. இல்லை நிதிக்கு அரசரா….. யாருக்காக இந்த நீதி.. மக்களுக்கா.. இல்லை நிதிகொடுக்கும் கார்பரேட் நிருவனங்களுக்கு சாதகமான நீதியா… முதலில் யார் யார் ஆதார் எண் பெற்றுள்ளார்கள்… அனைத்து அரசு அலுவலர்கள், அனைத்து அமைச்சர்கள், அனைத்து துறை அதிகாரிகள்(நிதி மற்றும் நீதி துறை) மற்றும் சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதார் எண் பெற்றுள்ளார்களா இல்லையா என்பதை பொது மக்களுக்கு தெரியப்படுத்தவும்….