ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை ஆய்வாளர் கைது!-சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்!-முழு விபரம்.

வருமான வரி வழக்கில் சிக்கிய “ஜெடி டேப்ஸ் பிரைவேட் லிமிட்டெட்” என்ற தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி, அதன் நிர்வாகியிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டு, முதல் தவணையாக ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய உத்தரபிரதேச மாநிலம், லக்னோ, வருமான வரித்துறை ஆய்வாளர் தர்மஷீல் அகர்வால் என்பவரை, சிபிஐ அதிகாரிகள் இன்று பொறி வைத்து கையும், களவுமாக கைது செய்துள்ளனர்.

மேலும், அவரது வீடுகளில் நடந்த சோதனையில், ரூ.10.50 லட்சம் பணம் மற்றும் பல முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

கைது செய்யப்பட்ட வருமான வரித்துறை ஆய்வாளர் தர்மஷீல் அகர்வால். (File Photo)


Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply