மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்!

மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சிக்கூடத்தை 19.10.2018 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் S.நடராஜன் திறந்துவைத்தார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தினசரி 35-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால் உடலின் எடை சீராகவும், உடலின் அனைத்து உறுப்புகளும் புத்துணர்வுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கு தரவேண்டும்.

தொடர் உடற்பயிற்சியால் நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கும். இதனால் பல நோய்களிலிருந்து விடுபடலாம். 

தன்னம்பிக்கை, உடல் வலிமை, ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மன அழுத்தம், பதற்றம், உடல் சோர்வு குறையும், முக்கியமாக பணியில் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உடற்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.

அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் எடுத்துரைத்தார்.

மேலும் காவல்துறையை சேர்ந்த அனைவரும் உடற்பயிற்சிக் கூடத்தை தினந்தோறும் பயன்படுத்தி பயனடையும்படி கேட்டுக்கொண்டார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply