கர்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஆண் மருத்துவ உதவியாளர்!-ஆபத்திற்கு பாவமில்லை.

சேலம் மாவட்டம், ஏற்காடு, வெள்ளக்கடை ஊராட்சிக்குட்பட்ட பெரியேரிக்காடு கிராமத்தில் வசிக்கும் கரிய ராமர் மனைவி மஞ்சுளா (வயது 24), என்ற கர்பிணி பெண்ணிற்கு, இன்று காலை 9 மணியளவில் பிரசவ வலி வந்ததாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மஞ்சுளாவை ஏற்றிக்கொண்டு மருத்துவனை நோக்கி புறப்பட்டனர்.

ஆனால், மருத்துவனை செல்லும் வழியிலேயே மஞசுளாவிற்கு பிரசவ வலி அதிகரிக்க, 108 ஆம்புலன்ஸ் ஆண் மருத்துவ உதவியாளர் அர்ஜூன் அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். அப்பெண்ணிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர் நல்ல நிலையிலேயே தாயும், குழந்தையும் ஏற்காடு நாகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

பெரும்பாலும் 108 ஆம்புலன்சில் கர்பிணி பெண்களை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, அவசியம் பெண் மருத்துவர், பெண் செவிலியர் மற்றும் பெண் மருத்துவ உதவியாளர்கள் ஆம்புலன்சில் பணியில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில குடும்பம் நலம் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் இதில் அக்கறை செலுத்துவார்களா?

-நவீன்குமார்.

Leave a Reply