பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக படைத் திரட்டும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

நேற்று கர்நாடகா- (08.11.2018)

இன்று தமிழ்நாடு- (09.11.2018)

இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, எதிர் வரும் மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்போடு, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதற்காக தனது அகில இந்திய சுற்று பயணத்தை தொடங்கியுள்ளார்.

நேற்று பெங்களுரில் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகௌடாவையும், அவரது மகனும், கர்நாடக மாநில முதலமைச்சருமான குமாரசாமியை சந்தித்த சந்திரபாபு நாயுடு, இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

மிக விரைவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான தலைவர்களை ஒன்றிணைத்து, அகில இந்திய அளவில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்த, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் இத்தகைய முயற்சி எந்தளவிற்கு பலன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply