இலங்கை பாராளுமன்றம் கலைப்பு!-மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும்!-ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்த இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

Sri Lanka Parliament Speaker Karu Jayasuriya.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

இப்பவும் நான் தான் இலங்கையின் பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்க பிடிவாதமாக சொல்லி வரும் நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெய சூர்யாவின் நிலைப்பாடும் இருந்து வந்தது.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அரசியல் நடவடிக்கை குறித்து, சபாநாயகர் கரு ஜெய சூர்யா பகிரங்கமாகவே விமர்சித்து அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

அதையெல்லாம் எள்ளவும் பொருட்படுத்தாமல், “முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்” என்று பிடிவாதமாக செயல்பட்டு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்று முன்தினம் வரை புதிய அமைச்சர்களை நியமித்து, அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட மைத்ரிபால சிறிசேன, இதன் மூலம் இலங்கை உள்பட உலக நாடுகள் அனைத்திற்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். மேலும், 2019 ஜனவரி  05-ந்தேதி இலங்கை பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என்றும் அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இத்தகைய நடவடிக்கை, இலங்கை மக்களிடம் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைப்பெற்றால், மஹிந்த ராஜபக்ஷவிற்கு வெற்றி கிடைக்காது என்பதால், அப்படி ஒரு அவமானத்தை சந்திக்க விரும்பாத மைத்ரிபால சிறிசேன, தோல்வி பயத்தின் காரணமாக, இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயம், இப்போதைக்கு ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை பிரதமராக நீடிக்க விடக் கூடாது என்பதிலும், மைத்ரிபால சிறிசேன தீர்க்கமாக இருந்துள்ளார். அவற்றின் விளைவுதான் பாராளுமன்ற கலைப்பும், தேர்தல் தேதி அறிவிப்பும்.

அதாவது “மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும்” என்ற மனநிலையில் ஜனநாயகத்தையும், இலங்கையின் அரசியல் இறையாண்மையையும், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குழித்தோண்டி புதைத்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply