கேமராவை தவறவிட்ட நக்கீரன் செய்தியாளர்! -கண்டுபிடித்து ஒப்படைத்த விருகம்பாக்கம் காவல்துறையினர்.

சென்னை, அம்பத்தூர், திருமலைபிரியா நகரில் வசித்து வரும் நக்கீரன் செய்தியாளர் நவீன்குமார் என்பவர், ஆட்டோவில் தவறவிட்ட கேமராவை கண்டுபிடித்து, அவரிடம் ஒப்படைத்த காவல்துறையினரை. சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

டிசம்பர் 12்-ந்தேதி மதியம் 02.30 மணிக்கு, விருகம்பாக்கத்தலிருந்து ஆட்டோவில் ஏறி முத்துராமலிங்கம் தேவர் தெருவில் இறங்கி சென்ற நக்கீரன் செய்தியாளர் நவீன்குமார் என்பவர், தான் வைத்திருந்த கேமரா (மாடல் – Canon 6 D) அடங்கிய பையை ஆட்டோவில் மறந்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து TN-05 S 4719  என்கிற ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல் என்பவரை கண்டுபிடித்து, கேமரா அடங்கிய பையை நவீன்குமாரிடம் ஒப்படைத்தனர்.

மேற்படி சம்பவத்தில் துரிதமாக விசாரணை செய்து கேமரா அடங்கிய பையை கண்டுபிடித்த R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜீவ் பிரின்ஸ் ஆரூன், தலைமைக்காவலர் ஜான்சன் (த.கா.20493) மற்றும் முதல்நிலைக் காவலர் ஏ.ராதாகிருஷ்ணன் (மு.நி.கா.32411) ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply