திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அனுமதியின்றி மகாபோதி பவுத்த சங்கம் சார்பில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிர்வாகத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். அவர்கள் வழிப்பாடு செய்வதற்கு ஏதுவாக பெருமாள், பிள்ளையார், ஆதிபரா சக்தி, மசூதி, சர்ச் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் உள்ளது.
இந்நிலையில் பெல் நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத மகாபோதி பவுத்த சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் சார்பில் அதன் பொது செயலாளர் தேவேந்திரன் தலைமையில், பெல் நிர்வாகம் அனுமதி பெறாமல் மாகாபள்ளிபுரத்தில் இருந்து மூனரை அடி உயரத்தில் எடுத்து வந்த புத்தர் சிலையை, பெல் பி செக்டர் பகுதியில் இரவோடு இரவாக நிறுவி,நேற்று காலை புத்தர் சிலைக்கு பூஜை செய்தனர். இதைப் பார்த்த பெல் பாதுகாவலர்கள், பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய போலீசாரிடம் புத்தர் சிலை வைப்பதற்கு அனுமதி வாங்காமல் புத்தர் சிலை வைத்து வழிப்பாடு செய்வதாக புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய போலீசார் தேவேந்திரனை அழைத்து அனுமதியில்லாமல் புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை, அனுமதியில்லாமல் வைத்து வழிப்பாடு செய்ய மாட்டோம் என்று பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய போலீசார் எழுதி கேட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தேவேந்திரன் புத்தர் சிலை வைப்பது சம்மந்தமாக பெல் நிறுவனத்திடம் மனு அளித்ததாகவும், அந்த இடம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தெருப்பட்டி குளம் அருகே உள்ள இடம் பராமரிப்பு மட்டுமே பெல் நிர்வாகம் செய்து வருவதாகவும், அதனால் அந்த இடம் துவாக்குடி நகராட்சிக்கு சொந்தமானது என்று கூறிவிட்டதாகவும், அதனால் துவாக்குடி நகராட்சியிடம் அனுமதி கேட்டு கடந்த 11-ம் தேதி மனு அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார். அதன் அடிப்படையில் தான் புத்தர் சிலை வைத்ததாக கூறினார்.
இதுக்குறித்து துவாக்குடி நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவியிடம் கேட்டப்போது, மகாபோதி பவுத்த சங்கதினர் மனு கொடுத்துள்ளனர் அதனை சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும், அனுமதி கலெக்டர் தான் வழங்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில் அந்த இடம் துவாக்குடி நகராட்சியில் வராது என்றும், கூத்தைப்பார் பேருராட்சியில்தான் வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இன்று காலை 10 மணியளவில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக சுந்தரத்திடம் விபரம் கேட்டோம்.
புத்தர் சிலை வைப்பதற்கு முறையான அனுமதி வாங்காமல் இரவு நேரத்தில் புத்தர் சிலையை அமைக்க முயற்சித்தனர். மேலும், அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்ற விபரம் வருவாய்துறை ஆவணங்களைப் பார்வையிட்டால் தான் தெரியும். இதுகுறித்து திருவெறும்பூர் தாசில்தாருக்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர் ஆய்வு செய்து அறிக்கை அளித்தால்தான் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
-ஆர்.சிராசுதீன்.