திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் கட்டிடக்கலைத்துறை சார்பில் 3 நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில், கட்டிடக்கலைதுறையானது தனது முதல்  கருத்தரங்கம் “கட்டிடக்கலை மற்றும் கட்டுமான பொறியியல் துறைகளின்
ஆற்றல்திறமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான  சமீபத்திய போக்குகள்” என்ற  தலைப்பில் மூன்று நாட்கள் நடத்துகிறது. இந்த கருத்தரங்கம் 10.1.19 அன்று தொடங்கி 12.01.2019 வரை நடைபெறுகிறது.  விழாவினை முனைவர் மினிஷாஜிதாமஸ், இயக்குநர், தே.தொ.க திருச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். விழாவின் சிறப்பு அழைப்பாளராக டெல்லி கட்டிடக்கலை கவுன்சிலின் தலைவர் விஜய்  கர்க், பங்கேற்று சிறப்பித்தார்.

முனைவர் கே.திருமாறன், முனைவர் எல். சாய்கலா மற்றும் முனைவர், ஏ.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.  மூன்று நாள் நிகழ்வில் 300-க்கும் மேலான பேராசிரியர்கள், பொறியாளர்கள்,  வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள்  ஆய்வறிக்கைகள் சமர்பிக்கின்றனர். சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை, கட்டிடங்களின் செயல்திறன் மதிப்பீடு, காலநிலைக்கேற்ப கட்டிடங்கள் வடிவமைத்தல், போன்ற பல்வேறு  தலைப்புகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

ஆர்.சிராசுதீன்.

Leave a Reply