தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், சூரியூரில் இன்று (ஜனவரி 16) காலை முதல் தொடர்ந்து ஜல்லிகட்டு போட்டி நடைப்பெற்று வருகிறது. இதில் 500 ஜல்லிகட்டு காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர்.
திருச்சி சரக டி.ஐ.ஜி லலிதா லட்சுமி தலைமையில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், 25 காவல் ஆய்வாளர்கள், 60 உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட, 550 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு களித்தார்.
திருச்சி கோட்டாட்சியர் ஒ.அன்பழகன், திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை, திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
மேலும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஸ் மற்றும் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.