காவல்துறை தலைமை இயக்குனர்- DGP (Director General of Police) என்பது இந்தியக் காவல்துறையின் மிக உயரிய பதவியாகும். இப்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் ஆவர். இவர்கள் பொதுவாக ஒரு மாநிலத்தில் காவல்துறைக்கு தலைமை வகிப்பர்.
ஆயினும் இவர்கள் சிறைத்துறை, குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை முதலிய மாநில அரசின் துறைகளின் தலைவர்களாகவோ அல்லது நடுவண் புலனாய்வுச் செயலகம், மத்திய சேமக் காவல் படை போன்ற நடுவண் அரசின் துறைகளிளோ பணியமர்த்தப்படலாம்.
அசோகச் சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து இப்பதவியின் சின்னமாகும்.
இப்படி பலம் வாய்ந்த அதிகார மிக்க பதவியை, இந்தியாவில் பல மாநிலங்களில், ஆட்சி பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகள், தங்களின் கை பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏதோ கால் பந்தை போல உருட்டிவிட்டு விளையாடுகிறார்கள். இதற்கு இன்று உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பின் மூலம் கடிவாளம் போட்டுள்ளது.
மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு ஏற்றது போல் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை டிஜிபியாக பணியமர்த்துகின்றன. எனவே, இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டுமென பிரகாஷ் சிங் என்பவர், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிஜிபிக்கள் பணி ஓய்வுக்கு 3 மாதத்திற்கு முன்னதாக, புதிய பரிந்துரை பெயர்களை யுபிஎஸ்சிக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும். யுபிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்டப்பவர்களில் ஒருவரை, மாநில அரசு டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும் என 03.07.2018 அன்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, மாநில டிஜிபிக்களை அந்தந்த மாநில அரசே நியமிக்க அனுமதி கோரி கேரளா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, மாநில அரசு தங்கள் இஷ்டத்துக்கு டிஜிபிக்களை நியமிக்க முடியாது என கூறி, அனைத்து மாநிலங்களின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
உச்ச நீதி மன்ற உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Iday madiri Mavatta atchithalaivargalayum Ninaithamadiri Manila mudalvargal Pandaduvadai Supreem Court Matravendum. Saivargala?