கனடா நாட்டைச்சேர்ந்த டேவிட் ஆன்ட்ரூ டாலர் என்பவர் 19.01.2019 அன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து Uber Call Taxi மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து, இறங்கி சென்ற பின்னர் தனது பாஸ்போர்ட், விசா மற்றும் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஆகியவற்றை, கால் டாக்சியிலேயே மறந்துவிட்டது தெரியவந்தது.
உடனே டேவிட் ஆன்ட்ரூ இது குறித்து K11 சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், மேற்படி Uber கால் டாக்ஸி ஓட்டுநரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து, அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி பாஸ்போர்ட், விசா மற்றும் ஐபோனை பெற்று, காவல் நிலையத்தில் இருந்த கனடா நாட்டு டேவிட் ஆன்ட்ரூ டாலர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு பொருட்களை மீட்டு தந்த K-11 சி.எம்.பி.டி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் J.தீபா, தலைமை காவலர் V.துரைராஜ் (த.கா.15705) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
-எஸ்.திவ்யா.