திருச்சி தேசிய கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கல்லூரியின் தேசிய மாணவர் படையின் ஓர் அங்கமான விமானப் படை கல்லூரிகளுக்கு இடையேயான ‘AIRFEST-19’ போட்டியினை நேற்று (27 ஜனவரி 2019) ஏற்பாடு செய்திருந்தது. 8 கல்லூரிகளைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி R. சுரேஷ் குமார் கொடியினை ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தார்.
கர்னல் R.சிவநாதன் குரூப் கமாண்டர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். மேலும், அவர் கூறுகையில் “இந்தியாவிலேயே முதல் முறையாக விமானப் படைக்கென இவ்வாறு போட்டிகள் நடத்தப்படுவது பெருமைக்குரியது” என்று சுட்டிக் காட்டினார்.
இவ்விழாவில் தேசிய கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராமன் பேசியதாவது: “நமது கல்லூரியின் தேசிய மாணவர் விமான படையானது சமூக அக்கறையோடு நன்கு செயலாற்றி வருகிறது. மென்மேலும் உயர்ந்த குறிக்கோளை அடைய எனது வாழ்த்துகள்”என்றார்.
இந்த போட்டிக்கான வெற்றிச் சுழற்கோப்பையை பிஷப் ஹூபர் கல்லூரி தட்டிச் சென்றது. ஹோலி கிராஸ் கல்லூரி ஓவர் ஆல் ரன்னர் கோப்பையை தட்டி சென்றது. முன்னதாக கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி R.சுரேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார். மாணவன் V. ராகுல் நன்றியுரை ஆற்றினார்.
-ஆர்.மார்ஷல்.