திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப்ரவரி-10) மாலை 4.15 மணியளவில் திருச்சி செந்தணீர்புரம் அருகே உள்ள மேம்பாலத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 75 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் மீது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அந்த முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கால் மற்றும் முகத்தில் ரத்தம் கொட்டியது.
இதுகுறித்து உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாலையில் சுற்றித்திரியும் அனாதைகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த உள்ளுர் மொழிதெரியாத நபர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்… இப்படி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உண்ண உணவின்றியும், வாழ வழியின்றியும், ஆபத்தான சாலைகளில் திக்குதெரியாமல் சுற்றி திரிகின்றனர். இவர்கள் அனைவரையும் போர்கால அடிப்படையில் மீட்டு, காப்பகங்களில் தங்க வைத்து, அவர்கள் ஆயுள் காலம் வரை காப்பாற்றுவதற்கு மத்திய மாநில, அரசுகள் உரிய வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துக்களையும், ஆபத்துக்களையும் மற்றும் அனாதை மரணங்களையும் முழுமையாக தவிர்க்க முடியும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com