சென்னை, மடிப்பாக்கம் சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் சென்று குற்றவாளியான சுந்தர் (எ) சுந்தராஜின் இரண்டாவது மனைவி கீதாவிடம் மற்றும் அடகு கடைகளில் அடகு வைத்திருந்த திருட்டு நகைகள், சுமார் 90 சவரன் தங்க நகைகள், 3 லேப்டாப், 1 செல்போன், 2 டேப்லெட், ரொக்கம் ரூ.3 லட்சம், குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 3 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட சம்பவத்தில் திருட்டு நகைகளை உடனடியாக மீட்டு பறிமுதல் செய்த உதவி ஆணையர் கெங்கைராஜ், ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் முரளி, மடிப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டிதுரை, பள்ளிக்கரணை குற்றப்பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துசாமி, ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் பாலகிருஷ்ணன் (த.கா.44212), மடிப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் விஜயகாந்த் (த.கா.36050), ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் அந்தோணிராஜ்(த.கா.44002), ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு காவலர் அல்பர்கான் (கா.33344) ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
-எஸ்.திவ்யா.