இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கியது செல்லும்; தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானது!- டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.

Justice Sangita Dhingra.

Justice G. S. Sistani.

GSS28022019CW107282017
Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [620.13 KB]

தமிழக முதலமைச்சராகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெ.ஜெயலலிதா, மர்மமான முறையில் இறந்த பிறகு,  அஇஅதிமுக இரு அணிகளாக பிரிந்தது. தர்ம யுத்தம் நடத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர்.

இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டதால், வேறு வழியின்றி, சசிகலாவின் தயவால் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதலமைச்சர் ஆனார்.

அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், டிடிவி தினகரன் தரப்பும் உரிமை கோரியதால், இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 23 அன்று இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி கே.பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி அறிவித்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரனும், சசிகலாவும் தனித்தனியாக மேல் முறையீடு செய்தனர்.

இதையடுத்து, டிடிவி தினகரன் அமமுக கட்சி சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார்.

ஜனவரி மாதம் திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், குக்கர் சின்னத்தை ஒதுக்கித் தரக் கோரி டிடிவி தினகரன் மனு அளித்தார்.

இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை வழங்கவில்லை என்றால், டிடிவி தினகரன் மனுவின் மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னத்தை அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஒதுக்கி இன்று தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply