திருச்சி தேசிய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மூதறிஞர் ராஜாஜியின் நினைவுகளை நினைவு கூறும் வகையில், ஒரு சிறப்பு சொற்பொழிவு இன்று (மார்ச்-4) முற்பகல் 12 மணியளவில், திருச்சி தேசிய கல்லூரியின் கூட்டரங்கில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தன் எதார்த்த பேச்சின் மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகத்தில் நடக்கும் சீரழிவுகளை தோல் உரித்து காட்டினார். மனிதர்களின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்பதை தன் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
சரஸ்வதியாக இருந்த கல்வி தற்போது பணம் கொளிக்கும் லட்சுமியாக மாறிவிட்டதாக அவர் சுட்டிக் காட்டினார். அவரது எளிமையும், எதார்த்த பேச்சும் அரங்கத்தில் இருந்த அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.
தான் ஒரு ஆளுநர் என்பதை அறவே மறந்து, நாட்டில் உள்ள சாமான்ய மக்களின் வாழ்வியலை தன் பேச்சில் வெளிப்படுத்திய ஈ.எஸ்.எல். நரசிம்மனை, உண்மையிலுமே பாராட்டதான் வேண்டும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com