திருச்சி தேசியக் கல்லூரியின் நூறாவது ஆண்டு பட்டமளிப்பு விழா, மதுரை காமாராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். முனைவர். மா. கிருஷ்ணன், தலைமையில் இன்று (24-03-2019) காலை நடைப்பெற்றது..
தேசியக் கல்லூரியின் செயலர். ரகுநாதன் சிறப்பு விருந்தினரையும், பட்டதாரிகளையும், மற்றும் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர். முனைவர். ரா. சுந்தரராமன் சிறப்பு விருந்தினரையும், பட்டதாரிகளையும், அவர்களின் பெற்றோர்களையும் வரவேற்று, கல்லூரியின் கல்வி அறிக்கையை சமர்ப்பித்தார்.
சிறப்பு விருந்தினர் இளம் பட்டதாரிகளை வாழ்த்தி தனது பட்டமளிப்பு விழா உரையை தொடங்கினார். அதில் சாதாரன மாணவர்களை பட்டதாரிகளாக மாற்றிய பெருமை கல்லூரியின் பேராசிரியர்களையே சாரும் என்று வாழ்த்தினார். மேலும், மாணவர்களின் வாழ்வு சிறக்க மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியேரின் ஆசிகள் அவசியம் தேவை என்றும், மாணவர்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மரியாதையாக நடத்தவேண்டும் என்றும் எடுத்துரைத்தார். கல்லூரியின் பொறுப்பாளர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பால் கல்லூரி NIRF, NAAC மற்றும் UGC ஆகியவற்றின் அளவுகோளின்படி சிறப்பாக விளங்குகிறது என்று கல்லூரியை பாராட்டினார். மேலும், பட்டதாரிகளுக்கு இவ்விழா அவர்களது வாழ்க்கையில் ஒரு ஆரம்பமாக அமைய வேண்டும் என்றும், மாணவர்கள் இனிமேல்தான் அவர்களது அறிவுத் திறமையையும், அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மாணவர்கள் தனித்து இயங்கும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டினார். மேலும், சமுதாய பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வயது முதிர்தோரின் அனுபவம் இன்றியமையாதது என்றார். சுமார், 750 பல்கலைக்கழகங்கள், 32 ஆயிரம் கல்லூரிகள் 200-க்கும் மேற்ப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களை இந்தியா நடத்தி வந்தாலும், அதில் ஒன்று கூட உலக அளவில் பெயர் எடுக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார். அதற்காக இளம் பட்டதாரிகள் கல்வியை, அறிவியலை சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்க முனைய வேண்டும் என்றும், அண்டை மாநிலத்தவரின் மரியாதையை பெற முயற்சித்தால் அது கைகூடும் என்றும் கூறினார்.
‘தொட்டனை தூரும் மணர்கேணி’ என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க மாணவர்கள் விளங்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மாணவர்கள் தங்கள் நினைத்ததை அடைய தமது படிக்கும் பழக்கத்தையும், சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் தனது நேரத்ததை வீணடிக்காமல் பெற்றோரை மதித்து அறிவை பெருக்கி சமுதாயத்திற்கு உயயோகமாக விளங்குமாறு வாழத்தி விடைபெற்றார்.
பின்னர், கல்லூரி முதல்வர் 18 துறைகளை சார்ந்த தலைவர்களை அழைத்து, பட்டம் பெறபோகும் மாணவ, மாணவிகளை பட்டம் பெற அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதில் 10 அறிவியல் துறைகள், 3 வணிகவியல் துறைகள், மற்றும் 5 கலைத்துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் 75 ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (ஆ.Phடை) 156 முதுநிலை பட்டமும், 674 இளநிலை பட்டமும் மொத்தமாக 905 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் பி. வைஷ்னவ், இளங்கலை இயற்பியல் மாணவர் பல்கலைகழத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்று தங்க பதக்கம் பெற்றார். மேலும், இளநிலை உடற்கல்வித்துறை மாணவர் மா.முத்துக்கிருஷ்ணன்; பல்கலைக்கழக அளவில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், இளநிலையில் 13 மாணவ, மாணவிகளும், முதுநிலையில் 11 மாணவ, மாணவிகளும் பல்கலைக்கழக தேர்வில் பல்கலைகழக அளவில் முதல் 25 வரிசைக்குள் தேர்ச்சி பெற்று கல்லூரியின் புகழை நிலை நிறுத்தியுள்ளனர்.
முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பங்குபெற வந்த சிறப்பு விருந்தினரை, கல்லூரியின் செயலர் ரகுநாதன் முதல்வர். முனைவர். சுந்தரராமன், துணை முதல்வர்கள் முனைவர். ரவிச்சந்திரன் மற்றும் அகிலாஸ்ரீ அறிவியல் புல முதன்மையர். முனைவர். விவேகானந்தன், கலைப்புல முதன்மையர் முனைவர். ஈஷ்வரன் மற்றும் 18 துறைகளை சார்ந்த துறை தலைவர்களும், கல்லூரியின் பல்கலைகழகத்தின் செனட் உறுப்பினர் முனைவர் சா. செல்வராஐ; ஆகியோர் ஊர்வலமாக விழா நடந்த உள்விளையாட்டரங்கிற்கு அழைத்து சென்றனர். அங்கு இளம் பட்டதாரிகள் விருந்தினரை எழுந்து நின்று வரவேற்றனர்.
கல்லுரியின் மூத்த துறைத்தலைவர் சிவக்குமார், நில அளவியல் துறை தலைவர் பட்டதாரிகளின் பெயர்களை துணைவேந்தர் முன் வாசித்தார். நிறைவாக, கல்லூரியின் முதல்வர் இளம் பட்டதாரிகளுக்கு உறுதிமொழி எடுத்துவைத்து விழாவினை நிறைவு செய்தார்.
இவ்விழாவில் பட்டதாரிகளின் பெற்றோர்களும், குடும்பத்தினரும், பேராசிரியர்களும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com