பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைக் குழுவின் அறிக்கை இரண்டு வாரத்திற்குள் கிடைக்கும்: இலங்கை ஜனாதிபதி தகவல்.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேரைக் கொண்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கை அனைவருக்கும் பகிரங்கப்படுத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நீதிமன்ற அதிகாரத்தைக் கொண்டதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, அவ்வறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கமைய எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் தேடுதல்கள், கைது நடவடிக்கைகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் தேசிய பாதுகாப்பு விரைவில் உறுதி  செய்ய இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் உலகில் வேறெந்த நாட்டிலும் இடம்பெறாத வகையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை திரட்டவும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இலங்கை புலனாய்வு துறை முடிவெடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply