கடந்த 48 மணி நேரத்தில் இலங்கையில் பல்வேறு இடங்களில் இலங்கை கடற்படையினர் நடத்திய அதிரடி சோதனையில், 05 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 6-அங்குல நீண்ட 10 பி.வி.சி குழாய் மற்றும் 8-அங்குல நீண்ட 12 துண்டுகள், ஆயுதம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் 02 எண்ணெய் பாட்டில்கள், 02 ஆயுதம் சுத்தம் செய்யும் கருவிகள், 02 பெல்ட், மற்றவர்களின் அடையாள அட்டைகள், 10 மொபைல் போன்கள், இரண்டு வாக்கி–டாக்கி, 12 கத்திகள், 20 மேற்பட்ட சிம் கார்டுகள், அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய வீடியோக்கள்,
இது தவிர ஒரு நபர் தனது கைப்பையில் 07 மொபைல் போன்கள் வைத்திருந்தார். இன்னொரு நபருக்கு இரண்டு வங்கி கணக்குகள் இருந்தன. கடந்த 7 மாதங்களில் சவுதி அரேபியாவிலிருந்து 30 மில்லியன் ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. மற்ற நபர் 45 டிவிடி– சிடிக்கள் மேலும், பல்வேறு வங்கி பாஸ் புத்தகங்கள், 18 வங்கி ரசீதுகள், 4 ஏடிஎம் கார்டுகள் மற்றும் தமிழ் மொழியில் எழுதப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடிதம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், 12 பாகிஸ்தான் நாட்டவர்கள் ஜா–எலா பகுதியில் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அந்த 12 நபர்களில் இரண்டு பேர் மட்டுமே விசா வைத்திருந்தனர். இது சம்மந்தமாக 17 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-என்.வசந்த ராகவன்.