திருச்சி – திண்டுக்கல் சாலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை நோக்கி மதுபோதையில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வட இந்திய வாலிபர் ஒருவர், இன்று (12.05.2019) இரவு 7.15 மணியளவில் திருச்சி தேசிய கல்லூரி எதிரே வந்தபோது நிலை தடுமாறி சாலையில் சறுக்கி விழுந்தார். குடிபோதையில் அதிவேகமாக வந்ததால் சுயநினைவு இல்லாமல் சாலையில் மயங்கி கிடந்தார். வலது பக்க காதிலிருந்து லேசாக இரத்தம் கசிந்தது.
அச்சமயம் அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த தென்னூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாரூக் என்பவர் அருகில் இருந்த இளைஞர்களின் உதவியுடன் சுயநினைவு இல்லாமல் சாலையில் மயங்கி கிடந்த அந்த வட இந்திய வாலிபரை தூக்கி, தனது ஆட்டோவில் எற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முன்வந்தார். ஆனால், மயங்கி கிடந்த அந்த வட இந்திய வாலிபரை ஆட்டோவில் தாங்கி பிடித்துக்கொள்ள துணைக்கு யாரும் முன்வரவில்லை. இதனால் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், அந்த வட இந்திய வாலிபரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அந்த வட இந்திய வாலிபரிடம் செல்போன் மற்றும் எந்த ஆவணங்களும் கைவசம் இல்லை. அவர் மயக்கத்தில் இருந்ததால் அவர் புலம்பியது யாருக்கும் விளங்கவும் இல்லை.
எனவே, யாருக்காவது இவரைப் பற்றிய விபரம் தெரிந்தால், அவரது குடும்பத்தினருக்கோ (அல்லது) காவல்துறைக்கோ உடனே தகவல் தெரிவிக்கவும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com