திருகோணமலை, ரவுண்ட் தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடிக்கப் பயன்படுத்திய ஒரு படகு, 225 மீட்டர் நீளமான சட்டவிரோத மீன்பிடி வலை, 60.7 கிலோ கிராம் மீன் மற்றும் மீன்படி உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, திருகோணமலை துணை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கின்னியா பகுதியில் வசிக்கின்றவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-என்.வசந்த ராகவன்.