ஏற்காடு சேர்வராயன் கோவிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சேர்வராயன் குகை கோவில் வைகாசி திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

சேர்வராயன் – காவிரியம்மாள் சுவாமி சிலைகளை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். மதியம் 2.00 மணிக்கு துவங்கிய தேரோட்டம் மாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது.

இத்திருவிழாவிற்கு ஏற்காட்டில் உள்ள 67 கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். இதுதவிர சேலம் மாவட்டம் மற்றும் தர்மபுரி மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவ்விழாவிற்கு வந்திருந்தனர். 

-நே.நவீன் குமார்.

Leave a Reply