சென்னை, J-4 கோட்டூர்புரம் காவல் நிலையம் சுற்றுக்காவல் வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் K.ராமு, வாகன ஓட்டுநர்/ஆயுதப்படை காவலர் P.சக்திவேல் (கா.44468) மற்றும் ஊர்க்காவல் படை காவலர் K.அண்ணாசாமி (HG 905) ஆகியோர் கடந்த 26.05.2019 அன்று இரவு பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 02.30 மணிக்கு கோட்டூர்புரம், லாக் தெரு, சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் மூன்று பைகளுடன் சென்றவரை வாகனத்தை நிறுத்த சொன்னபோது நிறுத்தாமல் சென்ற வாகனத்தை துரத்திச் சென்றபோது, சுமார் 1 கிலோ மீட்டர் தள்ளி இருட்டான இடம் வந்தபோது, அந்த நபர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 3 பைகளை சாலையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
உடனே, உதவி ஆய்வாளர் ராமு தலைமையிலான காவல் குழுவினர் இதனை கண்காணித்து, சாலையில் வீசிச் சென்ற 3 பைகளையும் பார்த்தபோது, ஒரு கட்டை பை மற்றும் தலையணை உறைகள் இரண்டில் ரூ.1,56,61,560/- பணக்கட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மேற்படி பணத்தை வீசிச் சென்ற நபரை பிடிக்க காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு, சந்தேக நபரை துரத்திச் சென்று சுமார் ரூ.1.5 கோடி பணம் அடங்கிய பைகளை கைப்பற்றிய உதவி ஆய்வாளர் K.ராமு, வாகன ஓட்டுநர்/ஆயுதப்படை காவலர் P.சக்திவேல் (கா.44468) மற்றும் ஊர்க்காவல் படை காவலர் K.அண்ணாசாமி (HG 905) ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், 28.05.2019 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com