திருச்சி பனையக்குறிச்சி அருகே தடுப்புச்சுவர் இல்லாத சாலை! பழுதடைந்த பாலம்! திருச்சி – கல்லணை சாலையின் அவலம்.

திருச்சியிலிருந்து சர்க்கார்பாளையம் வழியாக கல்லணை வரை செல்லும் சாலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலம்  கல்லணை பிரிவு சாலையில் பனையக்குறிச்சிக்கு அருகில் சாலையின் வலதுபுறம் தடுப்பு சுவர் மற்றும் தடுப்பு தகடுகள் இல்லாத காரணத்தாலும், அருகில் இருக்கும் குறுகிய பாலம் சேதமடைந்து இருப்பதாலும், எந்த நேரத்திலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்துள்ளது.

மேலும், கல்லணைக்கு வரும் சுற்றுலா வாகனங்களும் பள்ளி பேருந்துகளும் இந்த வழியாகத்தான் அதிகளவில் செல்கின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்டவெள்ளப்பெருக்கின் போது இதன் அருகில் இருக்கும் பாலத்தின் மதகு சேதமடைந்து வெள்ளநீர் கசிந்தது குறிப்பிடத்தக்கது. அச்சமயத்தில் அப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் மிகுந்த பதட்டமடைந்தனர்.

ஆனால், அதன்பிறகு பொதுப்பணித் துறையினருக்கு பலமுறை எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மேற்படி இடத்தை நேரில் பார்வையிட்டு சாலையின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைத்து மற்றும் பழுதடைந்த பாலத்தையும் மதகையும் புதுப்பிக்கவில்லை என்றால், எந்த நேரத்திலும் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெருத்த சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.

– கே.பி.சுகுமார்.

 

 

Leave a Reply