ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் பதவியேற்றார். விஜயவாடாவில் இன்று நடந்த விழாவில் அவருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜூன் 6 ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், இது நாள் வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த சந்திரபாபு இவ்விழாவில் பங்கேற்கவில்லை. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர்.
மேலும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவரும், தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.