இலங்கை மன்னார் பேசாலை கடல் பகுதியில், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகொன்று கண்காணிக்கப்பட்டது. அந்த படகை சோதனையிட்டபோது, அதில் 140.760 கிலோ கிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கை கடற்படையினரை கண்டவுடன் கஞ்சா கடத்தி வந்தவர்கள் தப்பி சென்றதாக சந்தேகிக்கப்படுகின்றது.
கைபற்றப்பட்ட கஞ்சா மூட்டைகள் மற்றும் படகு ஆகியவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
-என்.வசந்த ராகவன்.