ஆட்சியர் அலுவலக நுளைவு வாயில் முன்பு அய்யாகண்ணு தலைமையில் அடுப்பு பற்றவைத்த விவசாயிகள்!-திருச்சியில் நடைப்பெற்ற நுதனப் போராட்டம்

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத மாநில அரசுகளை கண்டித்தும், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் தமிழகம் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதை சுட்டிக்காட்டும் வகையிலும், மேலும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலுயுறுத்தியும், அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிப்பதை கண்டித்தும், இன்று காலை 10.30 மணியளவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அய்யாகண்ணு தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுளைவு வாயில் முன்பு அடுப்பு பற்றவைத்து கஞ்சி காச்சி குடிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

‘இன்று மனுநீதி நாள், மக்கள் வரும் வழியை மறித்து அடுப்பு பற்றவைத்து கஞ்சி காய்ச்சுவது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. போராட்டத்தை கைவிட்டு அமைதியான முறையில் கலெக்டரிடம் உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்’ என்று தெரிவித்தனர்.

அதை ஏற்க மறுத்த அய்யாகண்ணு, ‘எங்களை கஞ்சி காய்ச்சி குடிக்க விடுங்கள், இல்லையென்றால் எங்கள் மலத்தை நாங்களே திண்போம்’ என்றார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் திகைத்துபோய் நின்றனர். இப்போராட்டம் இன்று மதியம் வரை நீடித்தது.

-கே.பி.சுகுமார்.

 

Leave a Reply