இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்த புனித அந்தோனியார் ஆலயம், மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேவாலயத்தை புதுப்பிக்கும் பணி இலங்கை கடற்படையினரால் நடைப்பெற்று வந்தது.  இலங்கை கடற்படையினர் இரவும், பகலும் தொடர்ந்து பணியாற்றி இந்த ஆலயத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்தனர். அதன் பிரகாரமாக இந்த ஆலயம் முன்பு இருந்ததை விட உயர்ந்த மற்றும் அழகிய முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ரிசால்வ் மரைன் டைவிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோசப் . ஃபாரல்  60,000.00 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேலும், இங்கு கட்டுமான நோக்கங்களுக்காக கட்டடக் கலைஞர்களாக பணியாற்றிய மனோஜ் க்ரூஸ் மற்றும் பெதும் மாகால்ல ஆகியோரின் பங்களிப்பு இந்த கட்டிடம் அழகுபடுத்தலுக்கு பங்களித்தது.

கச்சத்தீவு ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொண்டுள்ள கடற்படை கட்டடக் கலைஞரே இந்த ஆலயத்திலும் புதுப்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த தேவாலயத்தை நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply