கடலில் மூழ்கிய ஜோடி!-பெண்ணின் உடல் சடலமாக மீட்பு !-இலங்கை ருமசாலா கடற்கரையில் நடந்த விபரீதம்.

இலங்கை, காலியில் உள்ள ருமசாலா கடற்கரையில், ஒரு ஜோடி காணாமல் போனது குறித்து, ஹபரடுவா போலீசாரிடமிருந்து, இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, உடனடியாக இலங்கை தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட டைவிங் குழுவை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கடலில் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 30 வயதிற்குட்பட்ட பெண்ணின் உடலை மட்டும் கண்டுபிடித்து மீட்டனர். ஆனால், காணாமல் போன ஆணின் உடலை இலங்கை கடற்படையின் டைவிங் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இது குறித்து ஹபரடுவா போலீசார் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply