கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டுள்ள இந்திய கடற்படை கப்பல்!

இந்திய கடற்படையின்ரன்வீர்கப்பல், ஜூன் 18 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

கப்பல் துறைமுகத்துக்கு வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் செதன் சந்த்ர்ரெவு, இலங்கை மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்தார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

273 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ள இக் கப்பல், 146 மீட்டர் நீளமும், 4,560 டன் கொள்ளவும் கொண்டுள்ளது. மூன்று நாள் பயணமாக வந்தடைந்த இக் கப்பலின் குழுவினர், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல திட்டங்களில் கலந்துகொள்ள இருக்கின்றனர் .

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply