காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 49-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தியின் உடன் பிறந்த சகோதரி பிரியங்கா காந்தி உள்பட தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“ஸ்ரீ ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நெடுநாள் வாழ வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.