இலங்கையில் கடலோர சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ‘பச்சை நீல பசுமைப் போர்’ – என்ற திட்டம், இலங்கை கடற்படையினரால் திருகோணமலை கடற்படை தளத்தில் இன்று (ஜூன் 21) துவக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடலோரப் பகுதி மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது மூன்று அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
- கடல் மற்றும் நிலம் மாசுபடுவது, உயிரினங்களின் உயிர் வாழ்வுக்கும், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் நலவாழ்வுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
- அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் கடல் வளங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் சுரண்டுவது, கடல் உயிரினங்களையும், தாவரங்களையும் சேதப்படுத்துதல்.
- சாலைகள் அகலப்படுத்தப்படுவதாலும், நகரமயமாக்கல் காரணமாக கட்டுமானப் பணிகளாலும், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகப்பெரிய பாதிப்பு உருவாகி வருகிறது .
மேற்காணும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ‘பச்சை நீல பசுமைப் போர்’ – என்ற திட்டத்தை இலங்கை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
-என்.வசந்த ராகவன்.