கடற்கரை கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்திய இலங்கை கடற்படையினர்! 

உலகம் முழுவதும் இயற்கை காரணங்கள் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகள் காரணமாக  கடற்கரைகள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் பெரிதும் மாசுபட்டுகிடக்கின்றன. 

கடற்கரை மற்றும் நீர்நிலை ஓரங்களில் தேங்கிகிடக்கும் கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்நிலையில், கழிவுகள் இல்லாத கடற்கரைகளை உருவாக்க இலங்கை கடற்படை உறுதிபூண்டுள்ளது. அவற்றின் விளைவாக, வாராந்தோறும் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்களை இலங்கை கடற்படை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 29 ஜூன் 2019 அன்று காலி மற்றும் கிங்கொட கடற்கரையில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் இலங்கை கடற்படையினர்  ஈடுப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply