தகுதி இல்லாதவர்கள் நீதிபதிகளாக உள்ளனர்!-ஓய்வு பெறும் தருணத்தில் உண்மையை சொன்ன நீதிபதி.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே.

தகுதி இல்லாதவர்கள் நீதிபதிகளாக உள்ளனர். நீதிபதிகள் நியமனத்தில் உறவினர்களுக்கு சலுகை, பாரபட்சம், ஜாதி பாகுபாடு ஆகியவை பார்க்கப்படுவதாகவும், தற்போதுள்ள நீதிபதிகள் நியமன முறை ஆட்சேபத்திற்கு உரியது என, நாளை (ஜூலை 4) ஓய்வு பெற உள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நீதித்துறையில் 34 வருட அனுபவத்தில், தகுதி இல்லாதவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பூட்டிய அறைக்குள் தேநீர் அருந்தி கொண்டே நீதிபதிகள் தேர்வு நடக்கிறது. இதில், சிலருக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நீதிபதிகள் நியமனம் ரகசியமாக நடக்கிறது. நியமிக்கப்பட்ட பின்னர் தான், நீதிபதிகளின் பெயர்கள் தெரிய வருகிறது. எந்த தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது தெரியவில்லைநீதிபதிகள் நடைமுறை துரதிர்ஷ்டவசமானது.

தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை (National Judicial Appointments Commission(NJAC) உங்கள் அரசு கொண்டுவந்த போது, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், தங்களது அதிகாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, இந்த சட்டத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து, அதனை ரத்து செய்துவிட்டது.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply