இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக இரும்பு கடத்திய மூன்று நபர்கள் கைது!

ஹம்பாந்தோட்ட துறைமுக வளாகத்தில் இருந்து சட்டவிரோதமாக இரும்புகளை கடத்தி சென்ற 03 பேரை, இலங்கை கடற்படையினரும், இலங்கை போலீசாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

இந்த சிறப்பு நடவடிக்கையின் போது லாரி மூலம் கடத்தி சென்ற 1500 கிலோகிராம் இரும்பை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 23 முதல் 39 வயதுக்கு உட்பட்ட அம்பலாண்டோட்ட மற்றும் ஹம்பன்டோட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட இரும்பு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை, சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்ட போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply