இலங்கை மன்னார், ஊருமலை பகுதியில் மீன்வள உதவி இயக்குநரகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை கடற்படையினர் நடத்திய சோதனையில் 70 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட 3212 கடல் சங்குகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த ஒருவரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த 3,212 கடல் சங்குகளையும் பறிமுதல் செய்தனர்.
70 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட சங்கு ஓடுகளை விற்பனை செய்தல், கொண்டு செல்வது அல்லது ஏற்றுமதி செய்வதற்கான நோக்கத்துடன் வாங்குவது, மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின்படி குற்றமாகும்.
-என்.வசந்த ராகவன்.