அரசு பள்ளி வளாகத்தில் சுற்றி திரியும் பன்றிகள்!

சேலம் மாவட்டம், ஏற்காடானது தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலமாகும். இங்கு விடுமுறை தினம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு இருக்க, சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடங்களாகிய அண்ணா பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டம் மற்றும் அரசு கலையரங்கம் பின்புறம் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன.

மேலும், படகு இல்லம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாக மைதானத்தில், பள்ளி பணி நேரத்திலேயே பன்றிகள் சுற்றி திரிகின்றன.

இப்பள்ளிக்கு சுற்று சுவர் இருந்தபோதிலும்கேட் இல்லாததால் கால்நடைகள் சுதந்திரமாக பள்ளி வளாகத்தில் உலாவுகின்றன. இவ்வாறு உலாவும் பன்றிகளால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் நுளையாத அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ள வேண்டும்செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

            –நே.நவீன் குமார்.

Leave a Reply