எல்லை மீறி சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 04 இந்திய மீனவர்களை, கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு வெளி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் 31 ஜூலை அன்று கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
– என்.வசந்த ராகவன்.