“போர்ட்-Ford” கார் கம்பெனியின் 117-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 1000 கார்கள் இலவசமாக வழங்கப்படுவதாக வாட்ஸப் செயலி மூலம் உலகம் முழுவதும் ஒரு மோசடி விளம்பரம் வலம் வந்துகொண்டிருப்பதாக எமக்கு வந்த தகவலை அடுத்து, அவற்றின் உண்மை தன்மை குறித்து தெரிந்து கொள்வதற்காக களத்தில் இறங்கினோம்.
இந்த மோசடி விளம்பரத்தின் இணைப்பை பயன்படுத்தி அவற்றின் உள்ளே சென்ற போது 3 வினாக்களுக்கு விடையளித்த பிறகு, வாட்ஸப்பில் 20 நபர்களுக்கு கட்டாயம் பகிர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. நமது “உள்ளாட்சித்தகவல்” நட்பு வட்டத்திலிருந்த 20 நபர்களுக்கு அந்த இணைப்பை அனுப்பி வைத்தோம். அதன்பிறகுதான் இது மோசடி விளம்பரம் என்பது வெட்டவெளிச்சமானது.
இது தொடர்பாக இன்று மாலை சென்னையில் உள்ள போர்ட் கார் கம்பெனி விற்பனை பிரிவில் தொடர்புகொண்டு விசாரித்தோம். ‘எங்களுக்கும் இதுபோன்ற விளம்பரங்கள் வருகிறது’ என்று தெரிவித்தார்கள். மேலும், சென்னை மறைமலை நகரில் உள்ள “போர்ட்” கார் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள். நாங்கள் தொடர்பு கொண்டபோது அத்தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
எனவே, வாட்ஸப்பில் வலம் வரும் இலவச கார், இலவச ஸ்மார்ட் போன் மற்றும் இதுபோன்ற போலி விளம்பரங்களை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம் என்று இதன் மூலம் நமது வாசகர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்,
Editor & Publisher,
Exactly you said right