திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி ஆய்வுத் துறை சார்பில், கிராமப்புற மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி ஆய்வுத் துறை சார்பில்சுத்தமும் சுகாதாரமும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஸ்கோப்தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் சுப்புராமன் கழிப்பறை பயன்பாட்டைப் பற்றியும், தண்ணீர் சேமிப்பு பற்றியும் உரையாற்றினார்.

மேலும், மற்றொரு சிறப்பு விருந்தினராக மேலகல்கண்டார் கோட்டை ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியை பிபி அப்துல் பழைய நாகரீக உணவு முறைகளைப் பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும் உரையாற்றினார். கிராமத்தின் உணவு பழக்கங்களையும், நகரத்திலுள்ள உணவுப் பழக்கங்களையும், அதன் ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் பகிர்ந்து கொண்டார்.

கிராம மக்கள் அனைவரும் சத்தான உணவு உட்கொள்ளும் முறைகளையும், சுகாதாரம் பற்றி கற்றுக் கொண்ட முறைகளையும் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்களும், கிராம மக்களும் இணைந்து கலந்துகொண்ட மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி ஆய்வுத் துறை மாணவர் பிரியதர்ஷன் ஏற்பாடு செய்திருந்தார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply