திருச்சி தேசிய கல்லூரியில் டேலி மற்றும் ஜிஎஸ்டி குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது!

 

திருச்சி தேசிய கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் இந்திய கல்வி ஆராய்ச்சி சங்கம் இணைந்து டேலி மற்றும் ஜிஎஸ்டி என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி ஜி.எஸ்.டி மற்றும் இந்திய கணக்கியல் சங்கம் குறித்து நடைபெற்றது. இவ்விழா திருச்சிராப்பள்ளி கிளையின் தொடக்க விழா இன்று (செப்டம்பர் 16, 2019) தேசிய கல்லூரி ஆடிட்டோரியம் ஹாலில் நடைபெற்றது.

வந்தவர்களை வரவேற்கும் விதமாக திருச்சி தேசிய கல்லூரியின் வணிகவியல் துறை தலைவர், இணைப்பேராசிரியர் மற்றும் இந்திய கணக்கியல் சங்கத்தின் திருச்சி கிளை தலைவர் டாக்டர் கே.குமார் வரவேற்றார். தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர்.ஏ.டி.ரவிச்சந்திரன் தலைமை உரை வழங்கினார்.

முதன்மை விருந்தினராக எஸ்.ஆரோக்கியாராஜ் (கூடுதல்ஆணையர்,ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் ஆணையர், திருச்சிரப்பள்ளி) பேராசிரியர் பி.ஏ.நான்சி அறிமுகப்படுத்தினார். பின்பு அவர் தொடக்க உரை வழங்கினார்.

முதல் அமர்வு காலை 10.00 மணிக்கு தொடங்கப்பட்டது. டாக்டர் எம்.சவேரியார் துரைசாமி வரவேற்க வி.சந்தோஷ் பரத்வாஜ் (பி.காம், ஏ.சி.ஏ.,) ஜி.எஸ்.டி தொடர்பான இணக்கங்கள் குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இரண்டாவது அமர்வு 11.15 மணிக்கு தொடங்கியது. முதன்மை விருந்தினர் எஸ்.ஸ்ரீதர் (பி.காம்எல்.எல்.பி., சி.டபிள்யு.ஏ., இன்டர் & வரி ஆலோசகர்), டாக்டர் எஸ்.காஞ்சிதேவி அறிமுகப்படுத்தினார், பின்னர் அவர் ஜிஎஸ்டி நடைமுறைகள் குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்.

மூன்றாவது அமர்வு பிற்பகல் 1.15 மணிக்குத் தொடங்கப்பட்டது. எம்.மதன்ராஜ் (பி.காம்,எல்.எல்.பி. வக்கீல் மற்றும் வரி ஆலோசகர்) ஜி.எஸ்.டி உடன் டேலி பற்றிய மென்பொருள் பயிற்சியை வழங்கினார்.

இறுதியாக இந்திய கணக்கியல் சங்கம் திருச்சி-கிளை பற்றிய கருப்பொருளை செயலாளர் முனைவர்.சி.பரமசிவன், (வர்த்தக உதவிப்பேராசிரியர் பெரியார் கல்லூரி, திருச்சி)  வழங்கினார். முதன்மை விருந்தினரை பேராசிரியர் ஜே. ரேமா பிரியா வரவேற்றார்.

இந்த விழாவை இந்திய கணக்கியல் சங்கம் சேலம் கிளை பொருளாளர் முனைவர். கே.கிருஷ்ண குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பாராட்டினார். அவரை டாக்டர் M.சந்திரா அறிமுகப்படுத்தினார், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்திய உதவி கணக்கியல் சங்கத்தின் திருச்சி. கிளை, வணிகவியல் உதவி பேராசிரியர் மற்றும் பொருளாளர் டாக்டர்.எஸ்.சவரிமுத்து நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது..

இவ்விழாவை தேசிய கல்லூரி உதவி பேராசிரியர் (யுஏபி) டாக்டர் ராமியா வைத்தியநாதன் தொகுத்து வழங்கினார்.

-கே.பி.சுகுமார்.

One Response

  1. MANIMARAN September 19, 2019 10:42 am

Leave a Reply