பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு அக்டோபர் 11, 12 தேதிகளில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இது தமிழகத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச சரித்திர நிகழ்வாக கருதப்படுகிறது.
இதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் வரை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரயிருக்கிற நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று (08.10.2019) முதல் சீன தலைநகரான பெய்ஜிங்கில் முகாமிட்டு சீன தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன்
முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டதோடு, பாகிஸ்தான்- சீனா இடையே முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.
ஆக, தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் சந்திப்பின் போது, காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனைகள் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Ummm.