Loading...
Loading...
Loading...
2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான “நோபல் பரிசு” 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கர் ஆவார். அவருடன் அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கில் கிரேமர் ஆகியோர் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒரே துறையில் ஒரே நேரத்தில் நோபல் பரிசு பெறுகின்றனர்.
சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கான ஆய்வுகளுக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழ்மையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட மூவரும் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நோபல் பரிசு தொகை ரூ.6,54,10,917.51 (9 million Swedish krona) மூன்று பேருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்று நோபல் பரிசு தேர்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Great about this news,
Sarvadhesa azhavil VARUMAIYAI ozhippatharkkaga (RESEARCH ) seitha, intha 3 perukkum en manamarntha NAL Vazhthukkal.
Nan mattum illai, intha ulagamae NANDRI SOLLA kadamaipattirukkirathu,
Melum nan world citizen aga ithai solluvathil magizhchi adaikiraen