நடிகர் கமல்ஹாசன் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனை கௌரவிக்கும் வகையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்தினர், நடிகர் கமல்ஹாசனை, சிவாஜி கணேசனின் வீடான அன்னை இல்லத்திற்கு நேரில் வரவழைத்து, ஆரத்தியெடுத்து, அன்பாக உபசரித்து, விருந்தளித்து, கவிதை ஒன்றை நினைவு பரிசாகவும் வழங்கியுள்ளனர்.
இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் “அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது” – என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மீது பலபேர் தனிப்பட்ட முறையில் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தாலும், அவர் ஒரு “தேசிய கலைஞன்“ என்பதை அனைவரும் (அவரை விமர்சிப்பவர்கள் கூட) மனமார ஏற்றுக்கொள்வார்கள்.
அந்தவகையில், நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால கலைச் சேவையை பாராட்டும் வகையில், மத்திய, மாநில அரசுகள் அவருக்கு கலைத்துறைக்கான உயரிய விருதுகளை வழங்கி கௌரவிக்க வேண்டும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Hands up Mr. Kamal hasan SIR, congratulations