ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடக்கிறது. நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில், தும்காவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு தப்பி வந்து அகதிகளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச சிறுபான்மை சமூகத்தினருக்கு மரியாதை செலுத்துவதற்காக, பார்லிமென்டின் இரு அவைகளும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது.
ஆனால், காங்கிரஸ். மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டங்களை ஆதரிக்கின்றன. இவர்கள் மக்களிடையே வன்முறையை தூண்டுகின்றன. அசாமில் வன்முறையை புறக்கணித்து தற்போது அமைதிக்கு திரும்பிய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சிகள் மக்களின் துன்பங்களை பற்றி கவலைப்படவில்லை. வன்முறையில் ஈடுபடுபவர்களின் ஆடையை வைத்தே யார் வன்முறையை தூண்டுகிறார்கள் என்பதை மக்கள் அறியலாம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
pillayai killivittu thottilai aatuvathu pondrathu intha seyal